இரஷ்ய ஊடகவியலாளருக்கு விஷம் வழங்கப்பட்டதா? - பரிஸ் காவல்துறையினரின் விசாரணை!
13 ஐப்பசி 2023 வெள்ளி 21:00 | பார்வைகள் : 10746
இரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விஷம் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரஷ்ய-உக்ரேன் விவகார செய்திகளை எழுதி வரும் Marina Ovsiannikova எனும் பெண் ஊடகவிலாளரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரஷ்யாவைச் சேர்ந்த அவர், இரஷ்யா குறித்த விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வரும் நிலையில், தற்போது அவர் பரிசில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த உடகவியலாளர், நேற்று வியாழக்கிழமை நண்பகல் தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். சில நிமிடங்களில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக்குழுவினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உடல்நலத்துக்கு தீங்கான மிகவும் விஷம் கலந்த எதையோ உட்கொண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan