Paristamil Navigation Paristamil advert login

Yvelines : பாடசாலைக்கு அருகே கத்தியுடன் ஒருவர் கைது!

Yvelines : பாடசாலைக்கு அருகே கத்தியுடன் ஒருவர் கைது!

13 ஐப்பசி 2023 வெள்ளி 15:39 | பார்வைகள் : 8008


Limay (Yvelines) நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் அருகே கத்தி ஒன்றுடன் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்குள்ள lycée Condorcet உயர்கல்வி பாடசாலையின் அருகே பிற்பகல் 2.45 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். rue Charles-Tellier வீதியின் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை சோதனையிட்டனர். அதன்போது அவரது பையில் சமையல் கத்தி ஒன்று இருந்துள்ளது. அவர் தாக்குதல் நடத்தும் முனைப்புடன் இருந்தாரா என்பது குறித்து அறிய முடியவில்லை.

இன்று காலை, பா து கலே பிராந்தியத்தின் Arras நகரில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்