சர்வாதிகாரி ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்திய மூவருக்கு நேர்ந்த கதி

13 ஐப்பசி 2023 வெள்ளி 10:19 | பார்வைகள் : 8510
ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் காரணமாக உலக நாடுகளில் பதற்றம் அதிகரித்துவருகின்றது.
சிட்னி யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே ஜேர்மனி சர்வாதிகாரி அடொவ் ஹிட்லரின் பாணியில் வணக்கம் செலுத்திய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அருங்காட்சியகத்திற்கோ பணியாளர்களிற்கோ பாதிப்பு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அருங்காட்சியகம் தொடர்ந்தும் பாதுகாப்பான இடமாக விளங்குகின்றது என தெரிவித்த அதிகாரிகள், கைதுசெய்யப்பட்டவர்கள் யார் என்ற விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.