10 பேர் கைது - 24 பேருக்கு குற்றப்பணம் - பரிசில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்!

13 ஐப்பசி 2023 வெள்ளி 07:10 | பார்வைகள் : 7713
பரிசில் நேற்று வியாழக்கிழமை மாலை பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்திருந்த போதும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
Place de la République பகுதியில் இருந்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஆரம்பித்திருந்தது. 3,000 வரையான மக்கள் ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு 10 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
24 பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டது.
நாடு முழுவதும் பாலஸ்தீனத்துக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.