இன்று பிரான்சில் நடைபெற இருக்கும் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம். பாதிக்கப்படும் துறைகள்.

13 ஐப்பசி 2023 வெள்ளி 05:22 | பார்வைகள் : 13647
இன்று வாழ்க்கைச் செலவு உயர்வு, ஆனால் அரச உதவி இல்லை, சம்பள உயர்வு இல்லை, பொது துறைகளில் ஆண் பெண் வேறுபாடுகள் இன்னும் தொடர்கிறது.
இவைகளை கண்டித்து, தொழில்சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்த நிலையில் எந்தெந்த துறைகள் பாதிப்படையவுள்ளன.
SNCF போக்குவரத்து தொழிற்சங்கங்களான CGT-Cheminots, Sud-Rail, CFDT-Cheminots ஆகிய தொழில்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் SNCF தொடரூந்து சேவைகளில் RER C, RER D மூன்றுக்கு இரண்டு எனும் வீதத்தில் இயங்கவுள்ளன. TGV சேவைகள் வழமைபோல் இயங்கும்.
Parisசில் RATP சேவைகளான Bus, métro, tramway என்பன வழமைபோல் இயங்கும்.
SNCF மற்றைய Transilien சேவைகளான தொடரூந்துகள் H, L, U, N நான்குக்கு மூன்று எனும் வீதத்தில் இயங்கவுள்ளன.
அதேபோல் ஓர்லி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளதால் இன்று 40% சதவீதத்திற்கும் அதிகமான சேவைகள் பாதிப்படையும்.
தனியார் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் தங்களின் 'tarif des consultations' மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான கட்டன உயர்வு கேட்டு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நாடுமுழுவதும் 250 ஆர்ப்பாட்ட பேரணிகள் தொழில்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசில் இன்று மலை place d'Italieயில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ள
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025