இஸ்ரேலுக்கான எயார் பிரான்ஸ் விமான சேவைகள் இரத்து!
9 ஐப்பசி 2023 திங்கள் 19:00 | பார்வைகள் : 13815
இஸ்ரேல் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலின் Tel Aviv நகரத்துக்கான எயார் பிரான்ஸ் விமான சேவை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த நகரத்துக்கான சேவை இரத்துச் செய்யப்படுவதாகவும், மீண்டும் விமான சேவைகள் இயக்கப்படுவது குறித்து நாளை செவ்வாய்க்கிழமையே முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Charles-de-Gaulle விமான நிலையத்தில் இருந்து Tel Aviv நகருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு விமான சேவையும், வாரத்தில் மூன்று விமான சேவை Lyon நகரில் இருந்து Tel Aviv நகருக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரெஞ்சு மக்கள் ஜெருசலத்துக்கு பயணிப்பதை பரிந்துரைக்கவில்லை என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan