Paristamil Navigation Paristamil advert login

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

9 ஐப்பசி 2023 திங்கள் 15:35 | பார்வைகள் : 8202


தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலுக்கு "செரியாபாணி" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டல் வசதியுடன் கூடிய இந்தப் பயணிகள் கப்பல் நேற்றும் இன்றும் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வருவதற்கு ஆறாயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நாகப்பட்டினத்திலிருந்து – இலங்கைக்குப் பயணிக்க 6500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்