உலகின் சிறந்த நகரம் எது தெரியுமா....?
.jpeg)
9 ஐப்பசி 2023 திங்கள் 09:08 | பார்வைகள் : 9703
உலக அளவில் சிறந்த நகரமாக லண்டனும், இரண்டாம் இடம் பாரிஸிற்கும், மூன்றாம் இடம் நியூயோர்க்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உலகின் முதனிலை நகரங்களின் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த 25 நகரங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பிடித்துள்ளது. ரிசோசென்ஸ் கன்ஸல்டன்ஸி நிறுவனத்தினால் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியிலான தர வரிசையில் ரொறன்ரோ நகரம் 23ம் இடத்தை வகிக்கின்றது.
இந்த பட்டியலில் கனடாவின் மேலும் நான்கு நகரங்கள் முதல் நூறு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
வான்கூவார் 50ம் இடத்தையும், மொன்றியால் 60ம் இடத்தையும், ஒட்டாவா 90ம் இடத்தையும் கல்கரி 93ம் இடத்தையும் வகிக்கின்றன.
வறுமை, உயர்கல்வி, சுபீட்சம் உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025