பரிசில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - தடை விதிப்பு!
11 ஐப்பசி 2023 புதன் 12:38 | பார்வைகள் : 16324
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு Place de La République சதுக்கத்தில் இருந்து இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் இடம்பெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறை தலைமையகம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, லியோன், மார்செய் போன்ற நகரங்களிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan