இஸ்ரேல் தாக்குதல் : அரசியல் தீர்வை எதிர்பார்க்கும் பிரான்ஸ்!

11 ஐப்பசி 2023 புதன் 10:20 | பார்வைகள் : 12133
இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை அதிகரித்துச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த அரசியல் மூலமான தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக பிரான்சின் அரச பேச்சாளர் Olivier Véran இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐந்தாவது நாளாக இடம்பெறும் ஹாசா மீதான தாக்குதலில் இதுவரை 1,055 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.