Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் கோதுமை தோசை

தேங்காய் கோதுமை தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 14871


 டயட்டில் இருப்போர் காலையில் தானியங்களை உணவாக எடுத்து வந்தால் நல்லது. அதற்காக பலர் காலை உணவாக எடுத்து வருவது ஓட்ஸ் தான். பலருக்கு ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். ஆகவே சற்று வித்தியாசமாக முழு கோதுமையை அரைத்து, அத்துடன் தேங்காய் சேர்த்து அருமையான சுவையில் ஒரு காலை உணவை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

அந்த தேங்காய் கோதுமை தோசையானது காலையில் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த தேங்காய் கோதுமை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
 
தேவையான பொருட்கள்:
 
கோதுமை - 2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் கோதுமையை நீரில் நன்கு கழுவி, பின் 1/2 மணிநேரம் அதனை உலர வைக்க வேண்டும்.
 
கோதுமையானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அதில் தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள தோசை மாவை தோசைகளாக சுட்டு, எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், தேங்காய் கோதுமை தோசை ரெடி!!!

வர்த்தக‌ விளம்பரங்கள்