வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை
11 ஐப்பசி 2023 புதன் 05:22 | பார்வைகள் : 8308
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி ஸ்டிக்கர்களை பயன்படுத்தி மதுபானத்தை விற்பனை செய்தமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களின் வரி நிலுவை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வரியைச் செலுத்த தவறும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மதுவரித் திணைக்களம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவுக்கும் அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan