முதலிடத்தில் முகேஷ் அடுத்த இடத்தில் அதானி
11 ஐப்பசி 2023 புதன் 06:15 | பார்வைகள் : 10048
பணக்கார இந்தியர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் பணக்காரர்கள் குறித்த பெயர் பட்டியலை 360 ஒன் வெல்த் ஹருன் 2023 அமைப்பு வெளியிட்டுள்ளது .இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீட் குழுமத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கெளதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஹூருன் 2023 வெளியிட்டுள்ள பட்டியலின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 8.3 லட்சம் கோடியாகவும், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ. 4.7 லட்சம் கோடியாகவும் உள்ளது. சமீபத்தில் ஹிண்டன் பர்க் அறிக்கை காரணமாக அதானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணக்கார இந்தியர்கள் பட்டியல் விவரம்:
1)முகேஷ் அம்பானி - ரூ 808,700 கோடி
2)கௌதம் அதானி - ரூ 474,800 கோடி
3) சைரஸ் எஸ் பூனவல்லா-ரூ 2,78,500 கோடி
4) ஷிவ் நாடார்- ரூ 2,28,900 கோடி
5) கோபிசந்த் ஹிந்துஜா- ரூ 1,76,500
6) திலீப் ஷங்வி -ரூ 1,64,300
7) எல்என் மிட்டல் & குடும்பம்- ரூ 1,62,300
8) ராதாகிஷன் தமானி- ரூ 1,43,900
9) குமார் மங்கலம் பிர்லா- ரூ 1,25,600
10) நிராஜ் பஜாஜ்-ரூ 1,20,700
சுவாரஸ்யமாக, இந்தியாவில் 259 பில்லியனர்கள் உள்ளனர், கடந்த ஆண்டை விட 38 பேர் அதிகம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan