பிரான்சில் 50 இற்கும் மேற்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல்கள்!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 18:29 | பார்வைகள் : 11827
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலின் மீது ஹமாசின் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து பிரான்சில் 50 இற்கும் மேற்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல்கள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகப் பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் சில மிகவும் ஆபத்தானதாக இருந்துள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
யூத தேவாலயங்களின் முன்னர் பலர் கூடி உயிரச்சுறுத்தல் எச்சரிக்கைகளை கோசமிட்டுள்ளனர். யூதப் பாடசாலைகளிற்குள் த்ரோன்களை கமராக்களுடன் பறக்கவிட்டு அசச்சத்தை ஏற்படுத்தியதுடன் அவற்றில் உயிரச்சுறுத்தல் வாசகங்களையும் இணைத்துப் பறக்க விட்டுள்ளனர்.
பிரான்சிலும் தாக்குதல் நடாத்தப்படும் எனவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட அறிக்கையுடன், கடந்த 48 மணித்தியாலங்களிற்குள் இப்டியான உயிரச்சுறுத்தல் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட 1000 காவற்துறையினரிடம் பதிவாகி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025