இஸ்ரேலின் தாக்குதலிற்கு மக்ரோன் பாராட்டு!!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 17:27 | பார்வைகள் : 15593
காசாப் பகுதியில் தாக்குதல் நடாத்தி இழந்த பகுதிகளை இஸ்ரேல் மீட்டுவருவதை எமானுவல் மக்ரோன் பாராட்டி உள்ளார்.
«பயங்கரவாதத் தாக்குதலிற்கு எதிராக இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்துள்ளது»
«இஸ்ரேலின் இராணுவப் பாதுகாப்புத் தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவாக நாம் துணை நிற்போம். அதேவேளை ஹமாசின் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்»
«இஸ்ரேல் கடந்த சில நாட்களாக அனுபவித்திருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னை மீட்க பாதுகாப்புத் தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேலிற்கு முழு உரிமையும் உள்ளது»
«அந்தப் பகுதியில் நிரந்தர அமைதி உருவாக வேண்டும்»
என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025