Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் மாலிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் எயார் பிரான்ஸ்!

மீண்டும் மாலிக்கு சேவைகளை ஆரம்பிக்கும் எயார் பிரான்ஸ்!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 16:23 | பார்வைகள் : 15080


இரண்டு மாத இடைவெளியின் பின்னர் ஆப்பிரிக்க நாடான மாலிக்கு மீண்டும் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. 

வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்க உள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலிக்கும் பிரான்சுக்கும் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் மாலிக்கான தனது விமான சேவையினை எயார் பிரான்ஸ் நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் மாலிக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்த இடைவெளியில் மாலியில் உள்ள  பிரெஞ்சு இராணுவத்தினர் முழுவதுமான திரும்பி அழைக்கப்பட்டிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்