Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : யூத பாடசாலைக்கு முன்பாக ஆயுதத்துடன் ஒருவர் கைது!

பரிஸ் : யூத பாடசாலைக்கு முன்பாக ஆயுதத்துடன் ஒருவர் கைது!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 12:40 | பார்வைகள் : 9585


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Beth-Hanna பாடசாலைக்கு முன்பாக ஆயுதத்துடன் வருகை தந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் ஒக்டோபர் 8,  ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையின் நுழைவாசல் வழியாக உள்ளே நுழைய முற்பட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடன் சில கத்திகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்சில் உள்ள அனைத்து யூத பாடசலைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட யூத மத எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்திருந்தார்.

 

மேலும், பத்து பேர் வரையில் கைதும்  செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்