Paristamil Navigation Paristamil advert login

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..

10 ஐப்பசி 2023 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 7133


இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் அதற்கு கூலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ’தெரியாமல் நடந்த தவறுக்காக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
    
விஜய் மற்றும் லோகேஷ் சம்பந்தப்பட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது என்பதை பார்க்காமல், நான் அந்த வீடியோவை லைக் செய்து விட்டேன் என்றும், நான் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய ரசிகன் என்பதால் அதை செய்தேன் என்றும், அது என்னுடைய மோசமான நேரம் என்றும், உணர்ச்சிவசப்பட்டு லைக் செய்து விட்டேன் என்றும், இதனால் உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் இந்த நீண்ட பதிவுக்கு ஒரே ஒரு வார்த்தையில் லோகேஷ் கனகராஜ் ’ச்சில் ப்ரோ’ என்று கூலாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தற்போது கூல் ஆகி உள்ளதாக தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்