இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!
7 ஐப்பசி 2023 சனி 10:56 | பார்வைகள் : 12041
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட இடைவிடாத குண்டுத்தாக்குதலில் 22 இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய நேரம் காலை 6.30 மணி அளவில் (03:30 GMT) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். “தற்போது இஸ்ரேலை தாக்கி வரும் தீவிரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்!” என அவர் தனது X சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan