கனடாவில் பருவகால சளிக்காய்ச்சல் - முதலாவது மரணம் பதிவு!
.jpeg)
7 ஐப்பசி 2023 சனி 10:02 | பார்வைகள் : 8538
கனடாவில் பருவ காலத்தில் சளிக்காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது.
கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக இந்த பருவ காலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டு கால பருவ காலத்தில் இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவர் சளி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அரசாங்க இணையதளத்தில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எதிர்வரும் வாரம் முதல் அல்பர்ட்டா பிரஜைகள் பருவ கால சளி காய்ச்சல் மற்றும் கோவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விரும்புவோர் 811 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
உள்ளூர் சிகிச்சை நிலையங்களில் தடுப்பசி ஏற்றிக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025