Orly விமான நிலையத்திலும் மூட்டைப்பூச்சி!

6 ஐப்பசி 2023 வெள்ளி 16:17 | பார்வைகள் : 18596
பாடசாலைகளிலும், தொடருந்துகளிலும் கண்டறியப்பட்ட மூட்டைப்பூச்சி Orly சர்வதேச விமான நிலையத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வார புதன்கிழமை ஓர்லி விமான நிலையததின் நான்காவது முனையத்தில் காவல்துறையினர் மூட்டைப்பூச்சியினை அடையாளம் கண்டுள்ளார். காவல்துறையினருக்கான ஓய்வு அறை ஒன்றில் மூட்டைப்பூச்சி தென்பட்டதாக காவல்துறை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த அறை மூடப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது.
இரு காவல்துறை வீரர்களும் மூட்டைப்பூச்சி கடிக்கு ஆளானதாகவும், கழுத்து மற்றும் கால்களில் மூட்டைப்பூச்சி கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் மூட்டைப்பூச்சி பரவல் காரணமாக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025