Courbevoie : வாடகை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம்!

6 ஐப்பசி 2023 வெள்ளி 16:06 | பார்வைகள் : 11629
சமூகநல வீடமைப்பு (logement social) வீடொன்றில் வசித்த பெண் ஒருவரும் அவரது உடல்நலம் குன்றிய மூன்று பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை நீண்டகாலமாக செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டே அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Courbevoie (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் குறைந்த வாடகை அடிப்படையிலான சமூகநல வீடமைப்பு கட்டிடம் ஒன்றில் வசித்த பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றே வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக விட்டு வாடகை செலுத்தவில்லை எனவும், மொத்தமாக €31,920 யூரோக்கள் வாடகை அவர்கள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் மூன்று பிள்ளைகளும் autistic (மன அழுத்த நோய்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைக் கருத்தில் கொள்ளாமலும் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, குறித்த குடும்பத்தினருக்கான நன்கொடை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை சேகரிப்பில் இதுவரை €45,000 யூரோக்கள் சேகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025