Paristamil Navigation Paristamil advert login

புதிய சாதனையை படைத்த 'லியோ'

புதிய சாதனையை படைத்த 'லியோ'

6 ஐப்பசி 2023 வெள்ளி 13:30 | பார்வைகள் : 5323


தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாட்டில் முதல்முறையாக ‘லியோ’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் முதல்முறையாக ‘லியோ’ என்ற தமிழ் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படம் அந்நாட்டில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளைப் போலவே வங்கதேச நாட்டிலும் விஜய்யின் படத்தை பார்க்க அந்நாட்டு சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருப்பதாக அந்நாட்டின் விநியோக உரிமையை எடுத்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் வங்கதேசத்தில் வெளியாக உள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுவரை வெளியாகாத நாடுகளிலும் வெளியாக இருப்பது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்