இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை மீது சைபர் தாக்குதல்!

9 ஐப்பசி 2023 திங்கள் 08:14 | பார்வைகள் : 12024
இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து சபையின் (Île-de-France Mobilités) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 6, வெள்ளிக்கிழமை இந்த சைபர் தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாகவும், 4,000 பேரின் தரவுகள் திருட முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முயற்சியை அடுத்து போக்குவரத்து சபை வழக்கு தொடுத்துள்ளது.
ஆனால் இந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், தரவுகள் எதுவும் திருடப்படவில்லை எனவும், பயனாளர்கள் அச்சமடையத்தேவையில்லை எனவும் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேவேளை, இதே போன்ற மற்றுமொரு தாக்குதல் இடம்பெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025