இஸ்ரேலின் கொடி வண்ணத்தில் ஒளிரும் ஈஃபிள் கோபுரம்!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 15:53 | பார்வைகள் : 11174
இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஈஃபிள் கோபுரம் தனது மின் விளக்குகளை இஸ்ரேலின் கொடி வண்ணத்தில் ஒளிரவிட உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை திங்கட்கிழமை இஸ்ரேலின் கொடியினை ஈஃபிள் கோபுரத்தில் ஒளிரவிடப்பட உள்ளதாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.