லியோ' படத்தின் அதிரடி அப்டேட்..!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 13:11 | பார்வைகள் : 6294
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஒரு ஆச்சரியமான தகவலாக ’லியோ’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது பாடல் இருப்பது தெரிய வந்துள்ளதோடு அந்த பாடல் நாளையே வெளியாகிறது என்பது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக உள்ளது.
இதனை அடுத்து நாளையும் இணையதளங்கள் ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது பாடலை எழுதியவர் ஏற்கனவே இரண்டு பாடல்களை எழுதிய விஷ்ணு எடாவன் தானா? பாடியவர் யார்? அந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025