இஸ்ரேல் மீது தாக்குதல் - விமானசேவைகளை நிறுத்தும் எயார்பிரான்ஸ்!!

7 ஐப்பசி 2023 சனி 18:24 | பார்வைகள் : 10895
இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடாத்தும் தாக்குதலினால் டெல்-அவிவ் இற்கான பறப்புகள் அனைத்தையும் எயார் பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
பிரான்சின் பயணிகள் விமான சேவைகளின் பொதுத் தலைமையகமான DGAC (Direction générale de l'aviation civile) இன் ஆணையுடன் இஸ்ரேல் நோக்கிய அனைத்து சேவைகளையும் எயார்பிரான்ஸ் அடுத்த ஆணைவரை நிறுத்துகின்றது
விமானம் மற்றும் அதன் பணியாளர்கள் மற்றும் விமானிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தங்கள் சேவைகளை நிறுத்துவதாக எயார்பிரான்ஸ் தெரிவித்துள்ளது.