Clichy : துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் படுகாயம்!
7 ஐப்பசி 2023 சனி 16:47 | பார்வைகள் : 11440
நேற்று வெள்ளிக்கிழமை இரவு Clichy (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.
அங்குள்ள rue du Maréchal-de-Lattre-de-Tassigny வீதியில், குறித்த இளைஞன் தனது நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்த போது, திடீரென அங்கு வருகை தந்த இரு நபர்கள் திடீரென குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் குறித்த இளைஞன் கழுத்தில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளான். பின்னர் அவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.
துப்பாக்கிசூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து இருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 9 மி.மீ கலிபர் வகை துப்பாக்கிச் சன்னங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த இளைஞனது கழுத்துப்பகுதியில் சிக்கியிருந்த துப்பாக்கிச்சன்னம் சத்திர சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan