Paristamil Navigation Paristamil advert login

மன்னார் மீனவர் வலையில் சிக்கிய ஆபத்து நிறைந்த விலாங்கு மீன்

மன்னார் மீனவர் வலையில் சிக்கிய ஆபத்து நிறைந்த விலாங்கு மீன்

7 ஐப்பசி 2023 சனி 15:59 | பார்வைகள் : 10136


மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்புர் மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இன்றைய தினம் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.

பெரும்பாலும் இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.
அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும் ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

இவ்வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு,உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்