இன்றும் தாமதமடைந்த ஸ்ரீலங்கன் விமானத்தால் நெருக்கடி நிலை

4 ஐப்பசி 2023 புதன் 12:43 | பார்வைகள் : 6668
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்க காத்திருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானமொன்றும் இன்றும் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்கவிலிருந்து பெங்கொக் நோக்கி அதிகாலை 1.10 க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 403 என்ற விமானம் இன்று பிற்பகல் வரை பயணத்தை முன்னெடுக்காததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த விமான இன்று அதிகாலை 1.10 க்கு புறப்பட்டு காலை 8.30 அளவில் பெங்கொக் விமான நிலையத்தை அடைந்து பின்னர் முற்பகல் 10.40 ற்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது.