மூட்டைப்பூச்சி - பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சந்திப்பு!

4 ஐப்பசி 2023 புதன் 08:33 | பார்வைகள் : 11135
பரிசில் தலைதூக்கியுள்ள மூட்டைப்பூச்சி விவகாரம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் விவாதிக்கப்பட்டது. Nupes (இடது சாரி கட்சிகளின் கூட்டணி) கட்சியினர் இது தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டிருந்தனர்.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. இதனை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அரச பேச்சாளர் Olivier Véran அறிவித்தார்.
மூட்டைப்பூச்சிகளுக்கு எதிராக உடனடி பலன் தரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025