கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
6 ஐப்பசி 2023 வெள்ளி 07:56 | பார்வைகள் : 8222
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்களுக்கு தேவையான நீரை சேமித்து வைக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan