13,500 அடி உயரம்..! 104 வயது ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை புரிந்த மூதாட்டி
.jpeg)
6 ஐப்பசி 2023 வெள்ளி 06:30 | பார்வைகள் : 6086
104 வயதான மூதாட்டி 13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
104 வயதில் ஸ்கை டைவிங் ஆசை
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த டொரோத்தி ஹாஃப்னர் என்ற 104 வயது மூதாட்டி நீண்ட நாட்களாக ஸ்கை டைவிங் செய்யும் ஆசையில் இருந்துள்ளார்.
இதற்காக பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 104 வயது டொரோத்தி ஹாஃப்னர் சமீபத்தில் அதிகபட்ச உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் தனது நீண்ட நாள் கனவினை செய்து முடித்துள்ளார்.
டொரோத்தி ஹாஃப்னருக்கு முன்னதாக ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயது லினியா இங்கேகார்ட் லாசன் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் உலகின் வயதான ஸ்கை டைவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்து இருந்தார்.
இந்நிலையில் அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் 104 வயது டொரோத்தி ஹாஃப்னர் சுமார் 13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்காக சிகாகோவில் இருந்து 85 மைல் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் சென்று அங்கிருந்து விமானத்தில் வானத்திற்கு பறந்துள்ளார்.
டொரோத்தி ஹாஃப்னர் ஸ்கை டைவ் செய்யும் போது அவருடன் ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவரும் உடன் இருந்தார், இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் எதுவென்றால் டொரோத்தி ஹாஃப்னர் வாக்கர் உதவியுடன் மட்டுமே நடமாடி வருகிறார் என்பதாகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025