மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர் ஒருவரின் விபரீத முடிவு
6 ஐப்பசி 2023 வெள்ளி 06:23 | பார்வைகள் : 8228
தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47).
இவரது தந்தை சத்தியசீலன் உடல்நல குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார்.
மேலும் கமல்ராஜ் குடும்பமும் இலங்கையில் உள்ள நிலையில் இவர் தனியாக முகாமில் இருந்து வந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நமணசமுத்திரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan