Paristamil Navigation Paristamil advert login

 ரஷ்ய மக்களுக்கு  அதிபர் விளாடிமிர் புடின்  பகிரங்க அறிவித்தல்!

 ரஷ்ய மக்களுக்கு  அதிபர் விளாடிமிர் புடின்  பகிரங்க அறிவித்தல்!

5 ஐப்பசி 2023 வியாழன் 07:56 | பார்வைகள் : 19974


ரஷ்ய உக்ரைன் போர் பல மாதங்களை கடந்து இடம்பெற்றுவருகின்றது.

இந்த  போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளிலும்  சைரன்கள் ஒலிப்பது வழமையாக இருந்து வருகிறது.

ரஷ்யாவில் இன்று  05.10.2023 வழமைக்கு மாறாக காலை 10.30 மணியளவில் திடீரென நாடளாவிய ரீதியில் ஒலித்துள்ளது

சைரன் ஒலி எழுப்பிய நிலையில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் மக்களை  மூன்றாம் உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கும் அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய அவசர சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,

சைரன்களை ஒலியெழுப்பும்போது மக்கள், திகிலடையக்கூடாது, அமைதியாக இருக்கவேண்டும்.

தொலைக்காட்சி அல்லது வானொலியை இயங்கு நிலையில் வைத்து அதில் கூறப்படும் தகவலை கவனிக்கவேண்டும்.

அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அதை மக்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காகவே இந்த எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த இந்த வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் புடின், தனக்குதானே கொடுத்துக்கொள்ளும் பிறந்தநாள் பரிசாக, அணு ஏவுகணை ஒன்றை வீசலாம் என்ற தகவல் வெளியாகி அச்சத்தை மேலும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


 

வர்த்தக‌ விளம்பரங்கள்