செனட் மேற்சபையின் தலைவராக ஐந்தாவது முறையாக தேர்வான Gérard Larcher!

2 ஐப்பசி 2023 திங்கள் 16:12 | பார்வைகள் : 7881
செனட் மேற்சபையின் தலைவராக மீண்டும் Gérard Larcher தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகபட்ச வாக்குகளைப் பெற்று ஐந்தாவது முறையாக அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
320 வாக்குகளில் 218 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். பாராளுமன்றத்தையும், அரசாங்க திட்டங்களையும் கண்காணிக்கும் மேற்சபையான செனட் சபையில் மூன்று வருடங்களுக்கு ஒருதடவை தலைவருக்கான தேர்தல் நடாத்தப்படுகிறது. இதில் Rambouillet (Yvelines) நகரின் முன்னாள் நகர பிதா மற்றும் இந்நாள் செனட் சபையின் தலைவர் மீண்டும் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
74 வயதாகும் அவர், 1986 ஆம் ஆண்டில் இருந்து செனட் சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025