'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல நடிகை..
2 ஐப்பசி 2023 திங்கள் 09:08 | பார்வைகள் : 7435
சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தொடர்ந்து, ‛நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷின் 50வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தில் இவர் இணைந்துள்ளார்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் 170வது படத்தை ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முதல் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் நேற்று அனிருத் இசையமைப்பதாக அறிவித்தனர். இன்று(அக்., 2) நடிகை துஷாரா விஜயன் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan