Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய பகுதியின் மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்....

ரஷ்ய பகுதியின் மீது உக்ரைன் சரமாரி தாக்குதல்....

2 ஐப்பசி 2023 திங்கள் 07:12 | பார்வைகள் : 9057


ரஷ்ய உக்ரைன் போர் 20 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகான எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

இதற்கிடையில் இரு நாடுகளும் இடையிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் போர் நிறைவு குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அமைச்சர் செர்ஜி ஷோய்கு,

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது 2025ம் ஆண்டு வரை நீளக் கூடும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய நிலப்பரப்பிற்கு நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக புகுந்த 9 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், 

உக்ரைனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியை குறி வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தின.

அதில் 9 உராகன் M.L.R.S ட்ரோன்களை ரஷ்ய ராணுவத்தினர் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தினர் என தெரிவித்துள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்