Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

1 ஐப்பசி 2023 ஞாயிறு 14:02 | பார்வைகள் : 8659


ஓக்டோபர் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய, எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்