திமுக வேட்பாளர் தோற்றால்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
1 ஐப்பசி 2023 ஞாயிறு 20:07 | பார்வைகள் : 11433
லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தி.மு.க.,வின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 234 சட்டசபை தொகுதி பார்வையாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல், அதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தல் பணி நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தை போல், இந்தியா முழுவதிலும் வெற்றி பெற இண்டியா கூட்டணியை அமைத்து உள்ளோம். தேர்தலில் நமது வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார். தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார்கள். லோக்சபா தேர்தலில் கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று லோக்சபா தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan