தண்டவாளத்தில் ஓய்வெடுத்த அன்னப்பறவைகள் -RER A தொடருந்து சேவை பாதிப்பு!

4 ஐப்பசி 2023 புதன் 08:00 | பார்வைகள் : 8416
தண்டவாளத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அன்னப்பறைவைகளை காப்பாற்றுவதற்காக RER A தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்ட சுவாரஷ்யமான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை Rueil-Malmaison மற்றும் Chatou-Croissy நிலையங்களுக்கிடையே பயணித்த RER A தொடருந்து சேவைகளே தடைப்பட்டிருந்தது. உடனடியாக அன்னப்பறவைகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணி ஆரம்பமானது.
நண்பகல் 12.40 மணி அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, அன்னப்பறவைகள் அகற்றப்பட்டன.
சிலமணிநேர மீட்புப்பணியின் பின்னர் போக்குவரத்து மீண்டும் சீரடைந்தது. மின் தடை, சமிக்ஞை செயலிழப்பு, மர்மப்பொதி போன்ற காரணங்களுக்கான தடைப்பட்ட தொடருந்து சேவை தற்போது இதுபோன்ற காரணத்துக்காக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.