Paristamil Navigation Paristamil advert login

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க

4 ஐப்பசி 2023 புதன் 05:01 | பார்வைகள் : 9776


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார்.

தனுஷ்க 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் அவுஸ்திரேலியானவின் டே ஸ்ட்ரீட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் பல மாதங்களாக விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் நிரூபித்த நிலையில், அவர் நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்