இரு மகள்களுடன் ஜன்னல் வழியாக குதித்த பெண் - சிறுமி பலி

3 ஐப்பசி 2023 செவ்வாய் 15:28 | பார்வைகள் : 12563
பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிள்ளைகளில் 12 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் Malakoff (Hauts-de-Seine) நகரில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 4 மற்றும் 12 வயது மகள்களுடன் பெண் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளார். இச்சம்பவத்தில் அவரது 12 வயது மகள் சம்பவ இடத்திலேயே கழுத்து முறிவு ஏற்பட்டு பலியாகியுள்ளார். 4 வயது மகள் Necker மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாய் படுகாயமடைந்த நிலையில் Georges Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உள்ளே ஜன்னலுக்கு அருகே கதிரை ஒன்றி இருந்துள்ளது. விசாரணைகளில் குறித்த பெண் தனது இரு மகள்களுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025