யாழ்ப்பாண தோசை
3 ஐப்பசி 2023 செவ்வாய் 13:40 | பார்வைகள் : 9468
யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள். ருசியும் அருமையாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி
தாளிப்பதற்கு :-
சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு
செய்முறை: உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். சீரகம், மிளகு, வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு, வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவில் அவித்த மா, அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து 10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும். புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
தாளித்ததையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக. ருசி அருமையாக இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan