Paristamil Navigation Paristamil advert login

ரோகித் மற்றும் கோலி ஆகியோரை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்

 ரோகித் மற்றும் கோலி ஆகியோரை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்

3 ஐப்பசி 2023 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 6647


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகக்கோப்பையை வெல்ல தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் மூன்றே நாட்கள் உள்ளது. 

இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஆனால், இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது. 

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். 

அவர் கூறுகையில், 'சீகு (கோலி) 2019 உலகக்கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

இந்த ஆண்டு அவர் பல சதங்களை அடித்தார் மற்றும் போட்டியில் அதிக ரன் எடுத்தவராக முடிப்பார் என்று நம்புகிறேன். பிறகு, அவரை தோளில் சுமந்துகொண்டு மைதானத்தை ஒரு சுற்று சுற்றி வர வேண்டும்.

ரோகித் மற்றும் கோலி இந்த இரண்டு மூத்த வீரர்களும் உலகக்கோப்பையை வெல்ல தகுதியானவர்கள். ரோகித் சர்மா 2011 உலகக்கோப்பைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார், ஆனால் தவறவிட்டார்.


பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளின் பாட்ஷா ஆனார். அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதால் உலகக்கோப்பை டிராபியை வெல்ல தகுதியானவர்' என தெரிவித்துள்ளார்.    
 

வர்த்தக‌ விளம்பரங்கள்