ஸ்பெயினில் பாரிய தீ விபத்து..... 13 பேர் பலி...!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 07:27 | பார்வைகள் : 12676
ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் நகரில் உள்ள இரவு விடுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அட்டலயாஸ் பகுதியில் உள்ள பிரபலமான டீட்டர் இரவு விடுதியில் சுமார் 06:00 மணியளவில் (04:00 GMT) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில் கட்டிடத்தின் மேலே தீப்பிழம்புகள் எரிவதையும், அதன் பெரிய ஜன்னல்களில் இருந்து அடர்ந்த, இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது.
காணாமல்போன மற்றும் அந்தவேளை வளாகத்தில் இருந்தவர்களை அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் முர்சியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க மேயர் அழைப்பு விடுத்துள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் இறுதியாக 08:00 மணியளவில் உள்ளே நுழைந்து நான்கு உடல்களைக் மீட்டுள்ளனர்.
பின்னர் 40 நிமிடங்களுக்குப் பிறகு மேலும் இரண்டு உடல்களைக் மீட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன.
புகையை சுவாசித்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளூர் விளையாட்டு மைதானம் பயன்படுத்தப்படுகிறது.
விடுதி பரபரப்பாக இருந்தபோது ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025