இன்று கடும் புயலுடன் கூடிய கனமழை, பாடசாலைகள் மூடப்படுகிறது.

3 ஐப்பசி 2023 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 10715
நேற்று திங்கட்கிழமை மாலையில் இருந்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், இன்று Philippe எனப் பெயர் இடப்பட்ட கடும் புயல் வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீர் அற்ற கால நிலையினால் இன்று பாடசாலைகள் மூடப்படுகிறது Météo-France அறிவித்தலின்படி வரும் 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மிமீ மழை அங்கு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் அவசரகால நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்களில் ஒன்றான Guadeloupe தீவுக்கூட்டத்தில் வாழும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025