Louis-Vuitton கடை மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்குதல்!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 06:17 | பார்வைகள் : 11309
சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவமனான Louis-Vuitton மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செம்மஞ்சள் நிற வண்ணப்பூச்சினை கடையின் வாசலிலும், கண்ணாடிகளிலும் தெளித்துள்ளனர். Dernière Rénovation எனும் சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பரிசில் Fashion show நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது. அதனைக் கண்டித்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘அவர்கள் எங்களது பணத்தினை பிரித்து எடுக்கிறார்கள். பரிஸ் Fashion week மூலம் மிகப்பெரும் பண முதலாளிகளை ஒன்றிணைக்கிறார்கள். இதனால் சுழற்சி முறையில் பணம் அவர்களுக்குள்ளேயே சுழலுகிறது. சமூக நலத்துக்கு இது தீங்கானது!” என தெரிவித்து அவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan