எரிபொருட்களின் விலை குறைந்தது Leclerc, Carrefour எரிபொருள் நிரப்பு நிலையங்களில்.
30 புரட்டாசி 2023 சனி 06:51 | பார்வைகள் : 10346
கடந்த கோடை காலத்தில் இருந்து பிரான்சில் எரிபொருட்களின் விலை என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக ஏறிச் சென்றுள்ளது. இதனால் வாகன பாவனையாளர்கள், நிறுவனங்கள், மீன் பிடித்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கம் எரிபொருட்களின் விலையை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் இலாபம் இன்றி சிலகாலம் தங்கள் விற்பனைகளை செய்ய முன்வர வேண்டும் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை total énergie நிறுவனம் ஏற்கனவே ஏற்க மறுத்து விட்ட நிலையில், Leclerc மற்றும் Carrefour எரிபொருள் நிரப்பு நிறுவனங்கள் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்துள்ளன.
செப்டம்பர் 29, வெள்ளிக்கிழமை முதல் Leclerc மற்றும் Carrefour இந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் லீட்டருக்கு ஒருசில centimes லாபத்தை குறைத்து அவை விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்கள் நன்றியினையும் அரசுக்கு தெரிவித்துள்ளனர். அதேவேளை எரிபொருட்களுக்கு அரசு வசூலிக்கும் வரியை குறைத்தால் மேலும் எரிபொருட்களின் விலை குறையும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan