நடு வீதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி!
29 புரட்டாசி 2023 வெள்ளி 09:36 | பார்வைகள் : 11771
மார்செய் (Marseille) நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்காம் வட்டாரத்தின் avenue des Chutes-Lavie வீதியில் பயணித்த கறுப்பு நிற மகிழுந்தில் இருந்து இறங்கிய ஆயுததாரி ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இரவு 8 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், கொல்லப்பட்ட இருவரும் 41 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அதனை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan